விரும்பத்தகாத வார்த்தைகளை பேசுவது ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்து விடும் சபாநாயகர் ஓம்பிர்லா கருத்து


விரும்பத்தகாத வார்த்தைகளை பேசுவது ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்து விடும் சபாநாயகர் ஓம்பிர்லா கருத்து
x

image courtesy: PTI

தினத்தந்தி 25 Feb 2023 7:04 AM IST (Updated: 25 Feb 2023 7:15 AM IST)
t-max-icont-min-icon

விரும்பத்தகாத வார்த்தைகளை பேசுவது ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்து விடும் பவன் கெரா பேச்சு பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா கருத்து தெரிவித்துள்ளார்.

காங்டாக்,

சிக்கிம் மாநில தலைநகர் காங்டாக்கில் காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் 19-வது மண்டல மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அதில், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கலந்து கொண்டார். அப்போது, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஓம்பிர்லா கூறியதாவது:-

அரசியல் பேச்சுகளில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்து விடும்.

நாடாளுமன்றத்தை பொறுத்தவரை அது விவாதம் நடத்துவதற்கான இடம், அமளிக்கான இடம் அல்ல. மக்கள் தங்களை கவனிக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்.


Next Story