சீர்மிகு நகர திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; கலெக்டர் செல்வமணி உத்தரவு


சீர்மிகு நகர திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; கலெக்டர் செல்வமணி உத்தரவு
x

சிவமொக்காவில் நடைபெற்று வரும் சீர்மிகு நகர திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டர் என செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டத்தில் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்ட பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த திட்ட பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும், தரமற்று இருப்பதாகவும் பல்வேறு பொது நல சங்கங்களும், மாநகராட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் செல்வமணிக்கும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் செல்வமணி சிவமொக்கா நேரு சாலை கோபி சதுக்கத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் அங்கு நடைபெற்று வரும் வேலைகள் குறித்து பணி சார்ந்த என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் நீண்ட நாட்களாக நடத்து வரும் இந்த திட்டப்பணிகளை விரைவில் முடிக்கவும், தரமாக அமைக்கவும் திட்டப்பணி மேலாளருக்கு உத்தரவிட்டார்.


Next Story