பெண்ணின் வயிற்றில் 5 ஆண்டாக இருந்த கத்தரிக்கோல்: விசாரணைக்கு உத்தரவு
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 செ.மீட்டர் நீளமுள்ள கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹர்சீனா (வயது 30) . கடந்த 2017 ஆம் அண்டு இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் வயிற்றில் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 செ.மீட்டர் நீளமுள்ள கத்தரிக்கோல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story