சிறுமியை விடாமல் விரட்டி விரட்டி உதைத்த சிறுவன்...பதற வைக்கும் காட்சி...!


சிறுமியை விடாமல் விரட்டி விரட்டி உதைத்த சிறுவன்...பதற வைக்கும் காட்சி...!
x
தினத்தந்தி 23 May 2022 11:16 AM IST (Updated: 23 May 2022 11:17 AM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்ட சிறுமி ஜார்கண்ட் பக்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பழங்குடியின மாணவி என்று தெரிய வந்துள்ளது.

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமியை வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி பக்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பழங்குடியின மாணவி என்று தெரிய வந்துள்ளது.

வீடியோவில், சிறுவன் சிறுமியை மீண்டும் மீண்டும் உதைப்பதைக் காணலாம்.

சிறுமி சீருடையில் பள்ளிப் பையை ஏந்தியவாறு காணப்படுகிறார். அவரை சிறுவன் ஒருவர் இடைவிடாது தாக்குகின்றார்.

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அந்த மாநில முதல்- மந்திரி ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார். இது குறித்து விசாரணை நட்த்திய போலீசார் . அந்த மானவ்ன் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தும்கா மாவட்டத்தில் வசிப்பவர் என்பதை கண்டுப்பிடித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் போலீசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.வைரல்




Next Story