சதீஸ் ஜார்கிகோளியின் இந்துமத கருத்தை எதிர்த்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


சதீஸ் ஜார்கிகோளியின் இந்துமத கருத்தை எதிர்த்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x

சதீஸ் ஜார்கிகோளியின் இந்துமத கருத்தை எதிர்த்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

பெங்களூரு:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்து மதம் குறித்து எங்கள் கட்சியின் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கருத்து கூறியுள்ளார். இது தனது சொந்த கருத்து என்றும், இதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் கிடையாது என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார். மேலும் தனது கருத்து குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து விவாதத்திற்கு வராமல் பா.ஜனதாவினர், அதை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து அரசியல் செய்கிறார்கள். பா.ஜனதாவை சேர்ந்த ரமேஷ் கட்டியும் இதே கருத்தை கூறினார்.

அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்?. 40 சதவீத கமிஷன், சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு போன்ற ஊழல்களை மூடிமறைக்க சதீஸ் ஜார்கிகோளி விவகாரத்தை முன்வைத்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். சதீஸ் ஜார்கிகோளியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. அரசியல் சாசனம் மீது நம்பிக்கை வைத்து அவர் செயல்பட்டு வருகிறார். அறிவியல் பூர்வமான சிந்தனைகளை மட்டுமே அவர் நம்புகிறார். அவர் மயானத்தில் தங்கி உணவு சாப்பிட்டார். பா.ஜனதாவினர் மதவாதத்தை நம்புகிறார்கள்.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.


Next Story