கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கோடி மதிப்புள்ள ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்!
மராட்டிய மாநிலத்தில் தானே பகுதியில், ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் தானே பகுதியில், ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளை தானே குற்றவியல் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ள நோட்டுகள் வழக்கில் பால்கர் பகுதியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
2019க்கு பின் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்ட நிலையில், 8 கோடி மதிப்புள்ள ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story