கர்நாடகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி முதலீடுகள் வரும்- மந்திரி முருகேஷ் நிரானி நம்பிக்கை


கர்நாடகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி முதலீடுகள் வரும்-  மந்திரி முருகேஷ் நிரானி நம்பிக்கை
x

கர்நாடகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி முதலீடுகள் வரும் என்று மந்திரி முருகேஷ் நிரானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

பெங்களூரு: தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் வருகிற நவம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கர்நாடகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.


இதுகுறித்து தாவோஸ் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினோம். அவர்கள் சாதகமான பதிலை கூறியுள்ளனர். நல்ல சீதோஷ்ண நிலை, தொழில் செய்ய உகந்த சூழல், உள்கட்டமைப்பு வசதிகள், நீர், மின்சார வினியோகம் போன்றவை முதலீடுகளை ஈர்க்கின்றன. இந்த முதலீடுகள் மூலம் கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். கர்நாடகத்தில் தொழில்துறையின் சாதனைகளை முதலீட்டாளர்களிடம் கூறி இருக்கிறோம்.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.


Next Story