கர்நாடகாவில் சாலை விபத்து: 7 பேர் பலி; 26 பேர் காயம்


கர்நாடகாவில் சாலை விபத்து:  7 பேர் பலி; 26 பேர் காயம்
x

கர்நாடகாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹுப்ளி,

கர்நாடகாவின் கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது, தார்வாத் நோக்கி சென்று கொண்டிருந்த எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதியது.

இந்த விபத்தில் ஓட்டுனர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். பலர் காயமடைந்தனர். அவர்களை ஹுப்ளி நகரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு 7 ஆக உள்ளது. 26 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story