ஜனாதிபதி தேர்தல்: மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை


ஜனாதிபதி தேர்தல்: மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 15 Jun 2022 3:55 PM IST (Updated: 15 Jun 2022 5:04 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது.

இதற்கிடையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக டெல்லியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பிடிபி, ராஷ்ட்ரிய லோக்தளம், சிவசேனா, தேசிய மாநாட்டுக் கட்சி, ஜெ.எம்.எம். உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்காக மாநிலங்களவையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் 4,809 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட உள்ளனர்.


Next Story