குடியரசு தினவிழா கொண்டாடப்படும் ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


குடியரசு தினவிழா கொண்டாடப்படும் ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

குடியரசு தினவிழா கொண்டாடப்படும் ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

குடியரசு தினவிழா கொண்டாடப்படும் ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி தெரிவித்துள்ளார்.

குடியரசு தினவிழாவுக்கு அனுமதி

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு மாநகராட்சியும், வக்பு போர்டுவும் உரிமை கொண்டாடியது. அந்த மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு(2022) ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், ஈத்கா மைதானத்தில் குடியரசு தினம் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து, அங்கு குடியரசு தினவிழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஈத்கா மைதானத்தில் குடியரசு தின கொண்டாடுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈத்கா மைதானத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அதுபோல், நாளை (அதாவது இனறு) குடியரசு தினவிழாவையொட்டி வருவாய்த்துறை உதவி கமிஷனர், அரசு முறைப்படி தேசிய கொடி ஏற்ற உள்ளார். முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் சாம்ராஜ்பேட்டை மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி ஈத்கா மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்களும் குடியரசு தினவிழாவில் பங்கேற்கலாம். இதற்கு என்று தனியாக பாஸ் எதுவும் கட்டாயமில்லை. தேசிய கொடி ஏற்றப்பட்ட பின்பு நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஈத்கா மைதானத்தில் நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story