தொகுதியில் உள்ள ஏழைகள், நடுத்தர மக்களிடம் போய் பேசுங்கள், குறைகளை கேட்டறியுங்கள், பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


தொகுதியில் உள்ள ஏழைகள், நடுத்தர மக்களிடம் போய் பேசுங்கள், குறைகளை கேட்டறியுங்கள், பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x

தொகுதியில் உள்ள ஏழைகள், நடுத்தர மக்களிடம் பேசுமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் பாஜகவின் வாராந்திர கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவை செயல்படும் போது நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் , சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023-24 உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்த விவாதம் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி , பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா , மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் ,அஸ்வினி வைஷ்ணவ், பகவத் கார்ல்,எஸ் ஜெய்சங்கர் மற்றும் முரளிதரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில், பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள சலுகைகளை மக்களிடம் விளக்குமாறு எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

தொகுதிகள் உள்ள ஏழைகள், நடுத்தர மக்களிடம் பேசுமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.

அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.


Next Story