சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத்தை ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மும்பை,
குடிசை சீரமைப்பு திட்ட நில மோசடியில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நள்ளிரவில் அவரை கைது செய்தது. இதையடுத்து, இன்று மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்செய் ராவத்தை அமலாக்கத்துறை ஆஜர் செய்தது.
சஞ்செய் ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற நீதிமன்றம், சஞ்செய் ராவத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதன்படி வரும் நான்காம் தேதி வரை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.
Related Tags :
Next Story