நெடுஞ்சாலை பணிக்காக டெல்லியில் 5 ஆயிரம் மரங்களை வெட்ட முடிவு


நெடுஞ்சாலை பணிக்காக டெல்லியில் 5 ஆயிரம் மரங்களை வெட்ட முடிவு
x

நெடுஞ்சாலை பணிக்காக டெல்லியில் 5 ஆயிரம் மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சாகரன்பூருக்கு பாரத்மாலா திட்டத்தில் ரூ.1,100 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் இந்த சாலைப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

14.7 கி.மீ. நீளமுள்ள இந்த சாலைக்காக சுமார் 10 ஹெக்டேர் வனப்பகுதி தேவைப்படுகிறது. இந்த பகுதியில் வேம்பு, அசோகா, நாவல் மற்றும் யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. சாலைப்பணிக்காக இந்த வனப்பகுதி மரங்கள் உள்பட மொத்தம் 5,104 மரங்களை வெட்ட வேண்டி இருக்கிறது. அல்லது மாற்றி நட வேண்டியுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், "இழக்கப்படும் மரங்களுக்கு ஈடாக பதர்பூர் சுற்றுச்சூழல் பூங்காவில் ரூ.8.66 கோடி செலவில் கூடுதல் மரக்கன்றுகள் நடப்படும்" என்றனர்.


Next Story