கிர் வனப்பகுதியில் கிணற்றில் விழுந்த 2 சிங்கக்குட்டிகள் மீட்பு


கிர் வனப்பகுதியில் கிணற்றில் விழுந்த 2 சிங்கக்குட்டிகள் மீட்பு
x

கோப்புப்படம்

கிர் வனப்பகுதியில் கிணற்றில் விழுந்த 2 சிங்கக்குட்டிகள் மீட்கப்பட்டன.

ஆமதாபாத்,

அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையை கடந்தது. இதையொட்டி புயலின் பாதையில் உள்ள பகுதிகளில் மீட்புப்படையினர் பெருமளவில்களமிறக்கப்பட்டனர்.

அதேநேரம் மாநிலத்தில் பரந்து விரிந்து கிடக்கும் கிர் வனப்பகுதியிலும் விலங்குகளை பாதுகாக்க 200-க்கு மேற்பட்ட மீட்புக்குழுக்களை மாநில அரசு நிறுத்தி இருந்தது.

பேரிடரில் சிக்கிய விலங்குகளை மீட்பது, சரிந்து விழும் மரங்களை அகற்றுவது போன்ற மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்த குழுவினர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

புயல் கரையை கடந்தபோது இந்த குழுவினர் வனப் பகுதியில் தீவிர களப்பணியாற்றினர். அப்போது திறந்த கிணறு ஒன்றில் 2 சிங்கக்குட்டிகள் தத்தளிப்பதை அவர்கள் கண்டறிந்தனர். உடனே அவற்றை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள இந்த கிர் வனப்பகுதி ஆசிய சிங்கங்களுக்கு பெயர் பெற்றதாகும். இங்கு கடந்த 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 674 சிங்கங்கள் உள்பட ஏராளமான விலங்குகள் இருந்தது கண்டறியப்பட்டது.


Next Story