போக்குவரத்துக்குப் பணம் இன்றி 1,000 கி.மீ. தூரம் கடந்து சொந்த ஊர் சென்ற ஒடிசா தொழிலாளர்கள்


போக்குவரத்துக்குப் பணம் இன்றி 1,000 கி.மீ. தூரம் கடந்து சொந்த ஊர் சென்ற ஒடிசா தொழிலாளர்கள்
x

இரவு-பகல் என தொடர்ந்து நடந்த அவர்களுக்கு சில இடங்களில் வாகனங்களில் ‘லிப்ட்’ கிடைத்தது.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் காலாகண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட திங்க்லகன் கிராமத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. ஊதியம் கேட்டபோது தாக்கப்பட்டனர். தங்கள் கையில் இருந்த சிறிதளவு பணமும் சாப்பாட்டுக்கு கரைந்து விட்டது.

இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். ஆனால் அதற்கான போக்குவரத்துக்கும் பணம் இல்லை. எனவே 1,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என கனத்த இதயத்துடன் முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் நடக்கத்தொடங்கினர்.

இரவு-பகல் என தொடர்ந்து நடந்த அவர்களுக்கு சில இடங்களில் வாகனங்களில் 'லிப்ட்' கிடைத்தது. 7 நாட்களுக்குப்பின் கடந்த 2-ந்தேதி சொந்த ஊரை அடைந்தபோது 3 தொழிலாளர்களும் மிகவும் சோர்வுற்று காணப்பட்டனர். அவர்களின் நிலைமையை பார்த்த கிராமத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக மாநில அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.


Next Story