ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை போல ரெயில்வே அதிகாரிகள் பதவி உயர்விலும் புதிய நடைமுறை
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி உயர்வில் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு புதிய நடைமுறை ஒன்றை கொண்டு வந்தது.
புதுடெல்லி,
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி உயர்வில் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு புதிய நடைமுறை ஒன்றை கொண்டு வந்தது. இதில் முக்கியமாக, சம்பந்தப்பட்ட அதிகாரியின் சகாக்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களிடமும் அவரை குறித்து கருத்துகள் கேட்கப்படும்.
இந்த முறையை ரெயில்வேயும் பின்பற்ற முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ரெயில்வே அதிகாரிகளின் பதவி உயர்வுக்காக அவர்களின் கீழ்நிலை ஊழியர்கள் மற்றும் சகாக்களிடமும் கருத்து கேட்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் எந்தவொரு பாரபட்சமும் இன்றி நியாயமான கருத்துகள் மற்றும் தரவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இந்த முழு நடவடிக்கையும் கண்டிப்பாக ரகசியமாக இருக்கும் என்றும் ரெயில்வே கூறியுள்ளது.
Related Tags :
Next Story