மந்திரி பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரத்தில் அதிர்ச்சிகரமான திருப்பம்...!


மந்திரி பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரத்தில் அதிர்ச்சிகரமான திருப்பம்...!
x

பன்னா குப்தாவின் ஆபாச வீடியோ விவகாரம் தற்போது அதிர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னா குப்தா சுகாதாரத் துறை மந்திரியாக உள்ளார்.

சமீபத்தில் பன்னா குப்தா பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை பா.ஜ.க எம்.பி., நிஷிகாந்த் துபே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அரசியல் எதிரிகள் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என பன்னா குப்தா விளக்கம் அளித்தார்.

பன்னா குப்தாவின் ஆபாச வீடியோ விவகாரம் தற்போது அதிர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் இருப்பதாக கூறப்பட்ட ஆருஷி வந்தனா என்ற பெண் தனது கணவர் முன்னாள் என்எஸ்யூஐ மாநிலத் தலைவர் இந்திரஜித் சிங்குடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

ஆருஷி வந்தனா, ஏப்ரல் 24ஆம் தனது படத்தைப் போட்டு ஆட்சேபனைக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது 9 ஆண்டுகளாக காங்கிரசில் இருக்கிறேன் கட்சியில் உள்ள செயல்பாடு காரணமாக மந்திரிகளை சந்தித்து வருகிறேன். பன்னா குப்தாவுடன் தன் சகோதரன் போன்றவர் அவருக்கு நான் ராக்கி கட்டி உள்ளேன். இந்த வீடியோ விவகாரம் அவரது புகழை கெடுத்து விட்டது. இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளேன் என கூறினார்.


Next Story