அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 22 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்


அரசு உண்டு உறைவிடப்பள்ளி  விடுதியில் உணவு சாப்பிட்ட  22 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 22 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

சிக்கமகளூரு-

தாவணகெரே மாவட்டம் மாயகொண்டாவில் அரசு உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 6 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. 6 பேரையும் மாயகொண்டா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலையில் மீண்டும் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 16 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு தரமற்ற அரிசியில் உணவு சமைத்து வழங்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விடுதி சமையலர்கள், கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




Next Story