குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு - 56.88% வாக்குப்பதிவு
குஜராத்தில் அமைதியான முறையில் முதற் கட்ட வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றது.
ஆமதாபாத்,
பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்தநிலையில், காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர்.
குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் இன்று தேர்ந்தல் நடந்த நிலையில் அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 72.32% வாக்குகள் பதிவாகி உள்ளன.
Live Updates
- 1 Dec 2022 5:54 PM IST
குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை முதல் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 1 Dec 2022 4:08 PM IST
குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபியில் 63.98% வாக்குகள் பதிவாகியுள்ள்ளதாக தெரிவித்துள்ளது.
- 1 Dec 2022 2:30 PM IST
குஜராத் தேர்தல் திருவிழா: ஒன்றாக சேர்ந்து வாக்களித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர்!
குஜராத்தில் முதற் கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒன்றாக சேர்ந்து வாக்களிக்க ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர் வாக்களித்தனர். இதில் 60 பேர் மட்டுமே வாக்களிக்கும் வயதை எட்டி உள்ளனர். மொத்தம் 96 பேர் கொண்ட இந்த குடும்பத்தில் 15 பேர் கிராமத்தில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 1 Dec 2022 2:05 PM IST
குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நண்பகல் 1 மணி நிலவரப்படி 34.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 1 Dec 2022 1:06 PM IST
எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களே அவ்வளவு தாமரை பூக்கும் என்று குஜரத்தில் கலோல் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
- 1 Dec 2022 12:17 PM IST
குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி 18.95 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
- 1 Dec 2022 11:40 AM IST
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் வகையில் சைக்கிளில் ஓட்டு போட வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பரேஷ் தனனி தனது சைக்கிளில் கேஸ் சிலிண்டர் ஒன்றையும் எடுத்து வந்தார்.
- 1 Dec 2022 11:01 AM IST
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் வாக்களித்தார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா இன்று ராஜ்கோட்டில் வாக்களித்தார்.
வாக்களித்த பின் ரவீந்திர ஜடேஜா கூறும் போது “மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
- 1 Dec 2022 9:58 AM IST
வேலை வாய்ப்புக்காக வாக்களிக்க வேண்டும்: ராகுல் காந்தி
குஜராத் மக்கள் வேலை வாய்ப்புக்காக வாக்களிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: வேலை வாய்ப்பு, மலிவு விலை சிலிண்டர், கடன் தள்ளுபடி ஆகியற்றிக்காக குஜராத் மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் இந்த பெருமளவு வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.