பா.ஜனதா பெண் எம்.பி. மீது 2 பிரிவுகளில் வழக்கு


பா.ஜனதா பெண் எம்.பி. மீது 2 பிரிவுகளில் வழக்கு
x

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா பெண் எம்.பி. மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவமொக்கா:

மத்தியபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யாசிங் தாக்குர் கடந்த 25-ந் தேதி சிவமொக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது 'லவ் ஜிகாத்தில் இருந்து பெண்களை பாதுகாக்க இந்துக்கள் கையில் கத்தி வைத்துக்கொள்ள வேண்டும்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

இந்த நிலையில் பிரக்யாசிங் தாக்குர் எம்.பி. சிவமொக்கா போலீசில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுந்தரேஷ் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153ஏ (மதம், இனத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல்), 295ஏ (மத உணர்வுகளை அல்லது மத நம்பிக்கையை அவமதிப்பதன் மூலம் வேண்டும் என்றே தீங்கிழைக்கும் செயல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story