காபி தோட்டத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது
பொன்னம்பேட்டை அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
குடகு;
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை அருகே உள்ள கிருகூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ். விவசாயியான இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக காபி தோட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் தோட்டத்தில் முதலை ஒன்று கிடந்துள்ளது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் தோட்டத்தில் கிடந்த முதலையை பெரும் போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர். பிடிப்பட்ட முதலை சுமார் 20 கிலோ எடை கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த முதலை தோட்டத்தின் அருேக உள்ள கீகோல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த முதலையை தூக்கி சென்று லட்சுமண தீர்த்த ஆற்றில் விட்டனர். இதனால் அந்த பகுதயில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.