ஜம்மு காஷ்ரில் மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ரத்து


ஜம்மு காஷ்ரில் மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ரத்து
x

மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக இன்று மாலை நடைபெற இருந்த இந்திய ஒற்றுமை யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

ராம்பன்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை, பல மாநிலங்களை கடந்து, 19-ந் தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது.

நேற்று ஜம்மு பிராந்தியத்தில் நக்ரோடா நகரில் ராணுவ பாதுகாப்பு அரண் அருகே காலை 8 மணியளவில் பாதயாத்திரை புறப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் முன்னேறிச் சென்றது. சாலையின் இருபுறமும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நின்று ராகுல்காந்திக்கு வரவேற்பு அளித்தனர்.

நேற்றைய பாதயாத்திரையில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் வானி, முன்னாள் தலைவர் ஜி.ஏ.மிர், முன்னாள் மந்திரி தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் கொட்டும் மழையில் இடையே ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கியது பனிஹால் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கனமழை காரணமாக இந்தச்சாலைகளில் கற்கல் விழும் என்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் கொட்டும் மழையில் ராம்பன் பகுதியில் இருந்து பனிஹால் நகரம் நோக்கி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்தை சென்று கொண்டிருந்தது.'

இந்தநிலையில் மோசமான வானிலை மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக இன்று மாலை நடைபெற இருந்த ராகுல்காந்தியின் நடைப்பயணம் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், நாளை ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story