பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருளுடன் பறந்து வந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது


பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருளுடன் பறந்து வந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
x

போதைப்பொருளுடன் பறந்து வந்த டிரோனை வீரர்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தினர்.

சண்டிகார்,

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகே உள்ள சர்வதேச எல்லையில் நேற்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கக்கார் கிராமப்பகுதியில் போதைப்பொருளுடன் டிரோன் ஒன்று பறந்து வந்ததை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த டிரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

பின்னர் அதை ஆய்வு செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சீனா மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் கொண்டு அந்த டிரோன் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து பாகிஸ்தான் எல்லை சுமார் 2 கி.மீ. தொலைவே உள்ளதால், இதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதி உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.


Next Story