பெங்களூருவில் மீண்டும் 2 அடுக்கு பஸ் சேவை தொடக்கம்
பெங்களூருவில் மீண்டும் 2 அடுக்கு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு மாநகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 2 அடுக்கு பஸ் போக்குவரத்து இருந்தது. சில காரணங்களால் அந்த பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பி.எம்.டி.சி. நிர்வாகம், பெங்களூருவில் மீண்டும் 2 அடுக்கு பஸ் போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது. வருகிற 6-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இந்த 2 அடுக்கு பஸ் சேவையை தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக 6 பஸ்களின் சேவை தொடங்கப்படுகிறது. இந்த பஸ்களை விதான சவுதா, கப்பன் பார்க் பகுதிகள் மற்றும் பாலங்கள் இல்லாத பகுதிகளில் இயக்க பி.எம்.டி.சி. திட்டமிட்டுள்ளது. பெங்களூரு நகரவாசிகள் இந்த பஸ்களில் பயணம் செய்து நகரின் அழகை ரசிக்கலாம்.
Related Tags :
Next Story