டெல்டாவில் நிலக்கரி சுரங்க விவகாரம் மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்து திமுக நோட்டீஸ்
புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது.
புதுடெல்லி,
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. புதிய நிலக்கரி சுரங்கம் தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை மந்திரி பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் வழங்கி உள்ளது.
Related Tags :
Next Story