ராணுவத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் - பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து
இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.500 மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
புதுடெல்லி,
உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் 1,035 வாணொலி தொலைதொடர்பு உபகரண பெட்டகங்களை கொள்முதல் செய்வதற்காக ஐதராபாத்தில் உள்ள ஐகாம் (ICOMM) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் ஆகும். இந்திய ராணுவத்திற்கு நடப்பு நிதி ஆண்டில் இருந்து தொலைதொடர்பு உபகரண பெட்டகங்களின் விநியோகம் தொடங்க உள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவத்தின் மொபைல் தொலை தொடர்பு சேவையின் நீண்ட கால தேவை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story