இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 310 ஆக குறைந்தது - 2 பேர் பலி


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 310 ஆக குறைந்தது - 2 பேர் பலி
x

கோப்புப்படம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 310 ஆக குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 500-க்கு கீழ் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 403 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 310 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 90 ஆயிரத்து 54 ஆக அதிகரித்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 571 பேர் குணமடைந்தனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 479 பேர் மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 263 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 4 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 5 பேர் பலியானார்கள். நேற்றைய பலி எண்ணிக்கை 2 ஆக குறைந்தது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 866 ஆக உயர்ந்தது.


Next Story