கருத்து பதிவுகளை நீக்குவதில் முரண்பாடு - இந்திய அரசுக்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு
இந்திய அரசு விதித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
பெங்களூரு,
இந்திய அரசு டுவிட்டர் நிறுவனத்துக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட டுவிட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து டுவிட்டர் இந்தியா நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட டுவிட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என எங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story