காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவிப்பு
ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவராக இருப்பதாகவும் குலாம் நபி ஆசாத் கடுமையாக சாடியுள்ளார்.
ஸ்ரீநகர்,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து இருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே குலாம் நபி ஆசாத் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதை பலமுறை வெளிப்படையாகவும் அறிவித்துள்ளார். தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் குலாம் நபி ஆசாத் இடம் பெற்றிருந்தார்.
முன்னதாக கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.
Related Tags :
Next Story