ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு சக்தியையும் பயன்படுத்தும் - ராகுல் காந்தி


ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு சக்தியையும் பயன்படுத்தும் - ராகுல் காந்தி
x

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு சக்தியையும் பயன்படுத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் நடைபெற்றுவருகிறது. யாத்திரையின் 129-வது நாளான இன்று ராகுல்காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு சக்தியையும் பயன்படுத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாதயாத்திரையின் போது சத்வாரி என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "உங்களுக்கு மாநில அந்தஸ்தை விட பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. உங்களின் உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது, அதை மீட்க காங்கிரஸ் தனது முழு சக்தியையும் பயன்படுத்தும்.

ஆகஸ்ட் 5, 2019 அன்று, அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் மத்திய அரசு அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபோது, ஜம்மு-காஷ்மீர் அதன் மாநில அந்தஸ்தை இழந்தது.

யூனியன் பிரதேசத்தில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மத்திய அரசாங்கம் அநீதி இழைத்தது. தங்களின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கேட்பதில்லை என்ற வேதனையை ஜம்மு காஷ்மீர் மக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தில் ஜம்மு காஷ்மீர் தான் அதிக சதவீதத்தை எதிர்கொள்கிறது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. முன்னதாக, இந்திய ராணுவத்தில் சேர விருப்பம் இருந்தது, ஆனால் தற்போது பாஜக அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு ராணுவத்திலும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை" என்றார் ராகுல் காந்தி கூறினார்.


Next Story