சீன ஆக்கிரமிப்பு பற்றி மோடி பேட்டி அளிக்கவேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை


சீன ஆக்கிரமிப்பு பற்றி மோடி பேட்டி அளிக்கவேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை
x

பிரதமர் மோடி, தற்போது சீனா என்ற பெயரை சொல்லவே பயப்படுகிறார்.

புதுடெல்லி,

மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சீனாவுக்கு எதிராக சுட்டெரிக்கும் விழிகளை காட்டுவேன் என்று முன்பு வாக்குறுதி அளித்தபிரதமர் மோடி, தற்போது சீனா என்ற பெயரை சொல்லவே பயப்படுகிறார்.தனது கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள சீனாவை தாஜா செய்வதை அவர் நிறுத்த வேண்டும். லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், மோடியின் வியூகம் இன்னும் 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் சொல்லுதல், நியாயப்படுத்துதல்' என்பதாக உள்ளது. அரசின் அணுகுமுறை பலவீனமாக உள்ளது. ஆகவே, 5 கோரிக்கைகளை முன்வைக்கிறோம். சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் ஆகியோர் ஒரே குரலில் பேட்டி அளிக்க வேண்டும். வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும். சீன ஆக்கிரமிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2 நாள் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும். முழுநேர முப்படை தலைமை தளபதியை நியமிக்க வேண்டும். அக்னிபத் திட்டத்தை வாபஸ்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story