நின்ற லாரி மீது கார் மோதல்; அக்காள்-தம்பி சாவு
பெங்களூரு அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் அக்காள்-தம்பி உயிரிழந்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு லாரி பழுதாகி நின்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், லாரியின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த சசிகலா(வயது 35), அவரது தம்பி ரஞ்சன்(26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சத்தியமூர்த்தி என்பவர் படுகாயம் அடைந்தார்.
சசிகலா பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் காசாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. மங்களூருவுக்கு சென்று விட்டு 3 பேரும் காரில் பெங்களூரு சென்ற போது விபத்து நடந்தது தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story