பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்; பஞ்சாப் எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை!


பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்; பஞ்சாப் எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை!
x
தினத்தந்தி 14 Oct 2022 10:02 AM IST (Updated: 14 Oct 2022 10:41 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

சண்டிகர்,

பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் செக்டரில் அமைந்துள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இன்று அதிகாலை 4.35 மணிக்கு ஆளில்லா விமானம்(டிரோன்) ஒன்று நுழைந்தது. இதனை கண்டதும் அதை நோக்கி வீரர்கள் 17 ரவுண்டுகள் குண்டுகளால் சுட்டனர். அதில் அந்த டிரோனின் இறக்கை ஒன்று சேதமடைந்தது.

அதை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒன்பது மாதங்களில், அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் 191 ஆளில்லா விமானங்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதிகளில் ஆங்காங்கே கேம்ப் அமைத்து இருக்கும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் உள்ளன.


Next Story