நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்: மாநில காவல்துறை குற்றப்பத்திரிகையில் 30 ராணுவ வீரர்களின் பெயர்கள்


நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்: மாநில காவல்துறை குற்றப்பத்திரிகையில் 30 ராணுவ வீரர்களின் பெயர்கள்
x

கோப்புப்படம் 

அப்பாவி பொதுமக்கள் மீது தக்குதல் நடத்தியது தொடர்பாக மாநில காவல்துறை குற்றப்பத்திரிகையில் 30 ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

கோஹிமா,

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிவிட்டு தொழிலாளர்கள் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர், சுரங்கத்தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என தவறுதலாக நினைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கிராம மக்கள் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எங்கள் சிறப்பு புலனாய்வு குழு 30 ராணுவ வீரர்கள் பெயரை கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் அளித்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்து உள்ளது.


Next Story