தேர்தல் வரும்போது மட்டும் பா.ஜனதாவுக்கு பாகிஸ்தான் நினைவுக்கு வருகிறது


தேர்தல் வரும்போது மட்டும் பா.ஜனதாவுக்கு பாகிஸ்தான் நினைவுக்கு வருகிறது
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வரும்போது மட்டும் பா.ஜனதாவுக்கு பாகிஸ்தான் நினைவுக்கு வருகிறது என மந்திரி சிவராஜ் தங்கடகி விமர்சனம் செய்துள்ளார்.

பெங்களூரு

கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிவமொக்கா கல்வீச்சு சம்பவத்தில் பா.ஜனதாவின் உண்மை கண்டறியும் குழு அங்கு சென்றுள்ளது.இத்தகைய வேலைகளை தான் அக்கட்சி செய்கிறது.

தேர்தல் வரும்போது மட்டும் இந்து மதம், மசூதி, பாகிஸ்தான், அஞ்சனாத்திரி ஆஞ்சநேயர் மலை போன்றவை நினைவுக்கு வரும்.

மங்களூருவில் இதற்கு முன்பு ஒரு இந்து சமுதாய இளைஞர் கொலை செய்யப்பட்டார். அப்போது பா.ஜனதாவினர் எங்கே சென்றனர்?. தேர்தல் வரும்போது மட்டும் சி.டி.ரவி, நளின்குமார் கட்டீலுக்கு இந்துக்கள் குறித்த நினைவு வருகிறது.

அஞ்சனாத்திரி மலையை மேம்படுத்த பா.ஜனதாவினர் என்ன செய்தனர். ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் தான் அதன் வளர்ச்சிக்கு திட்டங்களை அமல்படுத்துகிறோம்.

இவ்வாறு சிவராஜ் தங்கடகி கூறினார்.


Next Story