ஆந்திரா: ரேணிகுண்டாவில் துணி பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து


ஆந்திரா: ரேணிகுண்டாவில் துணி பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
x

தொழிற்சாலையில் இருந்து அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டா பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் துணி பைகள், மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படுத்தும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவென பரவியதால், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தொழிற்சாலையில் இருந்து அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே தீயணைப்புத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்ட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தொழிற்சாலையில் பரவிய தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் தொழிற்சாலையில் இருந்த உபகரணங்கள் சேதமாகியுள்ள நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story