அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன்


அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன்
x

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் டெல்லியில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரை இன்று நேரில்சந்தித்து பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில்,

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்ந்த கோவிலை காலால் எட்டி உதைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம் தெரிவிக்கும். அதிமுக சூறையாடப்பட்ட விவகாரத்தில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ! அவர்கள் அனைவரும் குற்றவாளிகளே.

பொதுக்குழு நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் வகையில் சிறப்பாக அமையும், அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி மட்டுமே, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக அனைத்து உறுப்பினர்களும் செயல்படுகிறோம். ஒ.பன்னீர் செல்வத்தை ஒருபோதும் எங்களால் ஏற்று கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story