பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு


பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
x

File Photo

தினத்தந்தி 9 Feb 2024 12:33 PM IST (Updated: 9 Feb 2024 12:38 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி - ஜெகன் மோகன் ரெட்டி இடையேயான சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.

புதுடெல்லி,

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக பல்வேறு வியூகங்களை இரு கட்சிகளும் வகுத்து வருகின்றன. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தையையும் இரு கட்சிகளும் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திர முதல் மந்திரியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்று சந்திரபாபு நாயுடு, பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


Next Story