மேற்கு வங்க முதல் மந்திரி மம்தாவை விமர்சித்த யூ டியூபர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை


மேற்கு வங்க முதல் மந்திரி மம்தாவை விமர்சித்த யூ டியூபர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை
x

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தாவை விமர்சித்த யூ டியூபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

பின்னணி பாடகர் கேகே மரணம் தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் பிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி யூ டியூபர் ரதூர் ராய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் கேகே மரணம் குறித்து தன்னுடைய முகநூலில் நேரலையில் பேசிய யூ டியூபர் ரதூர் ராய், மேற்கு வங்காள அரசின் நிர்வாகத்திறமையை விமர்சித்ததோடு அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் பிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அளித்த புகாரின் பேரில் ரதூர் ராய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story