குழந்தையுடன் தேர்தல் பணிக்கு சென்ற பெண்
குழந்தையுடன் தேர்தல் பணிக்கு சென்ற பெண்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில் தேர்தல் பணியில் பெங்களூரு மாவட்டத்தில் மட்டும் 42 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு பெண் ஊழியர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 2 வயது குழந்தை ஒன்று உள்ளது. நேற்று அவர் வாக்குச்சாவடி உபகரணங்களை பெற்றுச்செல்ல தனது குழந்தையுடன் வந்திருந்தார். பின்னர் தனது குழந்தையுடன், அவர் வாக்குச்சாவடி உபகரணங்களுடன் வாக்குச்சாவடிக்கு சென்றார். இதன் மூலம் அந்த பெண்ணின் கடமைப்பொறுப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story