உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 42 பேர் காயம்!


உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 42 பேர் காயம்!
x
தினத்தந்தி 3 Oct 2022 6:33 AM IST (Updated: 3 Oct 2022 8:08 AM IST)
t-max-icont-min-icon

பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்த 42 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் காயமடைந்தனர்.

இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 300 பேர் இருந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த தகவலறிசம்பவந்து தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு சென்று தீயை அணைத்தனர். மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட கலெக்டர், பிற மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்த 33 பேர் அருகிலுள்ள வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், காயமடைந்த 9 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story