பெங்களூரு மாநகராட்சியில் 243 வார்டுகள்: கர்நாடக அரசுக்கு வார்டு மறுவரையறை அறிக்கை தாக்கல்


பெங்களூரு மாநகராட்சியில் 243 வார்டுகள்: கர்நாடக அரசுக்கு வார்டு மறுவரையறை அறிக்கை தாக்கல்
x

பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறை அறிக்கை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் 198 வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகளின் எண்ணிக்கையை 243 ஆக உயர்த்த அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. அதன்படி மாநகராட்சி தலைமை கமிஷனர் தலைமையில் வார்டு மறுவரையறை குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு 2 மாதத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் 198 வார்டுகளின் எண்ணிக்கை 243 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்தன. அந்த வார்டு மறுவரையறை அறிக்கை கர்நாடக அரசின் நகர வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 120 வார்டுகளின் எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், சில வார்டுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த அறிக்கை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் தாக்கல் செய்யப்படும். அவர் அதை பார்த்து ஒப்புதல் வழங்கிய பிறகு, பொதுமக்களின் ஆட்சேபனைக்கு வெளியிடப்படும். இன்று (சனிக்கிழமை) அந்த அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story