மராட்டியத்தில் மிதமான நிலநடுக்கம்!


மராட்டியத்தில் மிதமான நிலநடுக்கம்!
x
தினத்தந்தி 31 Oct 2021 3:36 PM (Updated: 31 Oct 2021 3:36 PM)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தின் கிழக்கு பகுதியில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கட்சிரோலி நகரப் பகுதியின் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

கட்சிரோலியில் இன்று மாலை 6.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்த விரிவான தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.


Next Story