எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்
எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி விற்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
2020 - 2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், எல்ஐசியில் தனக்குள் பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனை செய்யப்படும். வங்கிகளில் டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாக்கப்படும். வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்வோம். டெபாசிட்களுக்கான காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது”என்றார்.
Related Tags :
Next Story