ரெயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்


ரெயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2020 12:59 PM IST (Updated: 1 Feb 2020 12:59 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்

புதுடெல்லி

2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* ஸ்வச் பாரத் மிஷனுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கு ரூ .12,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் கிராம சேமிப்பு திட்டம் மூலம்  கிராமங்களில் உள்ள பெண்கள் 'தன்யா லட்சுமி' என்ற அந்தஸ்தை மீண்டும் பெறலாம் 

* தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1.23 லட்சம் கோடி இலக்கு

* சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள் 

* 2021ஆம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி இலக்கு

* 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு

* ஒருங்கிணைந்த சமூக நலத்துறை திட்டங்கள் செயல்படுத்தப்படும் -

* 2020-21 ஆம் ஆண்டில் மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ .22000 கோடி ஒதுக்கீடு

* 2020-21 ஆம் ஆண்டில் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு ரூ .1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு

* டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும்

* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்-

* பெங்களூரு நகரில் 18,600 கோடி செலவில் புறநகர் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்படும், ரெயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு.

 * 2024க்குள் நாடு முழுவதும் 100 புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்

Next Story