2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி.வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சம் உயர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்
2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி.வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சம் உயர்ந்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி
2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* 2006-2016க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுமார் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்
* ஆரோக்கியமான வர்த்தகத்தை குறி வைத்து அரசு செயல்படுகிறது.
* ஜிஎஸ்டி வரி விதிப்பு நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகும்.
* ஜிஎஸ்டி போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் துறையில் செயல்திறனை அதிகரித்து உள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பயனளித்துள்ளது. ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நன்மை கிடைத்துள்ளது.
* மோடி ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான பயன்கள் நேரடியாக செல்கிறது
* தற்போது 40 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் கோடி நன்மை கிடைத்துள்ளது.
* ஜிஎஸ்டியால் சிறு குறு நடுத்தர தொழில்துறை பலனடைந்துள்ளது.
* பொருளாதார ரீதியாக நாட்டை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை ஒருங்கிணைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை கட்டமைத்தவர் மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
* ஜி.எஸ்.டி. அமலுக்குப் பின்னர் குடும்ப செலவினங்கள் 4 சதவீதம் குறைந்துள்ளது. 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 16 லட்சம் உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story