விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் ; நிர்மலா சீதாராமன்


விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் ; நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2020 11:33 AM IST (Updated: 1 Feb 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

 2020 - 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை  நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். 

* பண வீக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது, 

* இந்த பட்ஜெட் மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் இருக்கும்

*துடிப்பான, புதிய பொருளாதாரத்துக்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறேன். 

* மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமையும்

* இந்திய பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிக வலுவாகவே உள்ளது.

* உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா  விளங்குஇகிறது

* எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி நடைமுறை ஏப்ரல் 2020 முதல் அறிமுகப்படுத்தப்படும்.

* மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும்.

* 2014-19 வரை 28,400 கோடி டாலர் அன்னிய முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது.

 *ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உத்தரவாதமான வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ஜி.எஸ்.டியால் சராசரியாக மாத குடும்ப செலவீனங்களில் 4 சதவீதம் வரை மிச்சப்படுத்தப்படுகிறது. 

* அனைத்து மக்களுக்குமான பொருளாதார வளர்ச்சி,  சமூக நலன்,இலக்கு ஆகிய கொள்கைகள் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.

* 6.11 கோடி விவசாயிகள் பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

* விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும்

இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

Next Story