வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது- நிர்மலா சீதாராமன்
வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினர்.
புதுடெல்லி,
மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது.
இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ந் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
இரண்டாவது நாளான இன்று 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
புது ஆவேசத்துடன் பிரதமரின் தலைமையின் கீழ், இந்திய மக்கள் முன் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அனைத்து பணிவுடனும் அர்ப்பணிப்புடனும் முன்வைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் பொருளாதாரக் கொள்கையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
* இந்திய பொருளாதாரத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளது.
* அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
* மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்கும்
* ஜிஎஸ்டி காரணமாக நாட்டில் 60 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்தி உள்ளனர்.
* வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
* ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு குடும்பங்களில் 4 சதவீதம் சேமிப்பு உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story