மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் : நிர்மலா சீதாராமன்


மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் : நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2020 11:12 AM IST (Updated: 1 Feb 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

புதுடெல்லி,


 2020 - 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை  நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். 

* பண வீக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது, 

* இந்த பட்ஜெட் மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் இருக்கும்

*துடிப்பான, புதிய பொருளாதாரத்துக்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறேன். 

* மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமையும்

* இந்திய பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிக வலுவாகவே உள்ளது.

Next Story