2020-21 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்


2020-21 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:11 AM IST (Updated: 1 Feb 2020 10:11 AM IST)
t-max-icont-min-icon

2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது.

இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ந் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்தார்.

2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.

வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை நிதி அமைச்சர்கள்  சூட்கேசில் எடுத்து வருவார்கள். ஆனால் கடந்த முறை சூட்கேசுக்கு ‘பை பை’சொன்ன நிர்மலா சீதாராமன்..!  அரசு சின்னம் பொறிக்கபட்ட பையில் ஆவணங்களை எடுத்து சென்றார். அதுபோலேவே இன்றும்   அரசு சின்னம் பொறிக்கபட்ட பையில் கொண்டு வந்தார்.

Next Story